மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி ஆடி வெள்ளி திருவிழா நடைபெற்றது.;
சாத்தூர்,
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் ஆடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அரசு தடை விதித்தது. ஆதலால் நேற்று நடைபெற்ற ஆடி கடைசி வெள்ளி திருவிழாவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் வீட்டில் இருந்து யூடியூப் மூலமாக அம்மனுக்கு அபிேஷகம் நடைபெறுவதை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரசின் வழிகாட்டுதல் படி இருக்கன்குடி கோவில் நிர்வாகம் சார்பில் உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி பூசாரி, அறங்காவலர் குழு உறுப்பினர் பூசாரிகள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.