திருமணம் ஆன 1½ மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

திருச்சியில் கொரோனாவால் வேலையை இழந்ததால் திருமணம் ஆன 1½ மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-13 19:36 GMT
திருச்சி, ஆக.14-
திருச்சியில் கொரோனாவால் வேலையை இழந்ததால் திருமணம் ஆன 1½ மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புதுமாப்பிள்ளை
திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் முரளிகிருஷ்ணன். இவர், ஹீபர் ரோட்டை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், ஹீபர் ரோடு கீழக்கொல்லைத்தெருவில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். டிப்ளமோ படித்திருந்த முரளிகிருஷ்ணன், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
வேலையை இழந்தார்
தற்போது கொரோனா காரணமாக வேலையின்றி வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆடி மாதம் என்பதால், கீர்த்தனாவை பெற்றோர் தங்களது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். வேலையின்றி இருந்த கணவரிடம், அடிக்கடி செல்போனில் பேசி வேலை கிடைத்து விட்டதா? என்று பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் கீர்த்தனா செல்போனில் கணவர் ராமகிருஷ்ணனை அழைத்துள்ளார். ஆனால், செல்போன் அழைப்பை அவர் எடுக்க வில்லை. எனவே, நேரடியாக வீட்டுக்கு வந்து கீர்த்தனா பார்த்தார். அங்கு வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.
தற்கொலை
சந்தேகம் அடைந்த அவர், வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தார். அங்கு தூக்கில் பிணமாக முரளிகிருஷ்ணன் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் பாலக்கரை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.வேலை கிடைக்காத விரக்தியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்