டெய்லருக்கு அரிவாள் வெட்டு; 6 பேர் மீது வழக்கு

தோகைமலை அருகே டெய்லரை அரிவாளால் வெட்டிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-08-13 19:19 GMT
தோகைமலை
தகராறு
கரூர் மாவட்டம், பில்லூர் ஊராட்சி காலனியை சேர்ந்தவர் குன்னுடையான் (வயது 45), டெய்லர். அதே பகுதியை சேர்ந்த முரளி, சிவக்குமார், சுரேஷ்குமார், நவீன்குமார், அழகுராஜ், லோகநாதன் ஆகியோர் குன்னுடையான் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் குடிபோதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலம்பட்டி புதூர் பகுதி வழியாக குன்னுடையான் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு இருந்த முரளி மற்றும் அவரது நண்பர்கள் குன்னுடையானை தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
6 பேர் மீது வழக்கு
இதில் படுகாயம் அடைந்த குன்னுடையானை அப்பகுதி மக்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இ்ந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலுக்கு குன்னுடையான் புகார் அளித்தார். 
இதன்பேரில் குன்னுடையானை தாக்கிய முரளி, சிவக்குமார், சுரேஷ்குமார், பிரவீன்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்