கருணை அடிப்படையில் 3 பேருக்கு பணி நியமன ஆணை
பணியின் போது மரணம் அடைந்த அரசு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.
திருப்பத்தூர்
பணியின் போது மரணம் அடைந்த அரசு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியின் போது மரணம் அடைந்த அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்கள் ஷாலினி, ராம்குமார், துக்காராம் ஆகிய 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பணி நியமன ஆணையை வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, நேர்முக உதவியாளர் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.