திருச்செங்கோட்டில் செல்போன் பறிக்க முயன்ற 2 பேர் கைது

திருச்செங்கோட்டில் செல்போன் பறிக்க முயன்ற 2 பேர் கைது.

Update: 2021-08-13 18:24 GMT
எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு மார்க்கெட் அருகே மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க அதே பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த வழியாக வந்த ஜெபசிங்கிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். பின்னர் திடீரென ஜெபசிங் வைத்திருந்த ெசல்போனை ஒரு வாலிபர் பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். 

அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தப்ப முயன்ற 2 வாலிபர்களையும் பிடித்து திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி (வயது 20), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் குண்டக்காரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் ெதரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்