ஆபாச படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த வாலிபர் கைது

ஆபாச படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த வாலிபர் கைது

Update: 2021-08-13 18:20 GMT
திருவண்ணாமலை

தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தைகள் தொடர்பான ஆபாசபடம் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்களின் செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி ஆகியவற்றை வைத்து அவர்களை கண்டறிந்து மத்திய அரசு தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைக்கிறது.

மேலும், தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுத்து வருகின்றனர்.

இணையதளம், முகநூல் (பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களை கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவை சேர்ந்த 18 வயது வாலிபர் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்