ஓடும் பஸ்சில் திருட்டு

ஓடும் பஸ்சில் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-13 18:10 GMT
காரைக்குடி, 
சிவகங்கை காந்தி வீதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 58). இவர் தனது அக்காள் மற்றும் தம்பி மனைவியோடு சிவகங்கையில் இருந்து காரைக்குடிக்கு தன்னிடம் இருந்த பழைய நகைகளை மாற்றி புதிய நகை வாங்குவதற்காக பஸ்சில் வந்தார். காரைக் குடி பழைய பஸ் நிலையதில் இறங்கும்போது சாந்தி தனது கைப்பையை பார்த்தார். அப்போது பை பிளேடால் அறுக்கப் பட்டு கிழிந்து இருந்தது. அதில் வைத்திருந்த 3½ பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்