குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

நெல்லையில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-13 16:08 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை அந்தோணியார் குருசடி தெருவை சேர்ந்த சுயம்பு என்பவரின் மகன் லிங்கதுரை (வயது 33). இவர் பாலியல் பிரச்சினையால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையின்பேரில் கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதையடுத்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி நேற்று லிங்கதுரையை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார். நெல்லை மேலப்பாளையம் குறிச்சி நாகம்மாள்புரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் என்ற அம்மு என்ற பசுபதி அம்மு (22). இவர் தாழையூத்து பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். இவர் கலெக்டர் விஷ்ணு உத்தரவுபடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
இதேபோல் முக்கூடல் தியாகராஜர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் ரமேஷ் (29) என்பவர் வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவரும் கலெக்டர் உத்தரவுபடி பாளையங்கோட்டை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்