ஆழ்வார்திருநகரியில் எம்.சாண்ட் மினிலாரியில் கடத்தியவர் கைது

ஆழ்வார்திருநகரியில் எம்.சாண்ட் மினிலாரியில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-08-13 14:19 GMT
தென்திருப்பேரை:
தூத்துக்குடி புவியியல் மற்றும் சுங்கத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் சுப்பையா தலைமையிலான புவியியல் மற்றும் சுங்கத்துறை குழுவினர் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். ்அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் எவ்வித அனுமதியுமின்றி எம்.சாண்ட் (மணல்) எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புவியியல் மற்றும் சுங்கத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர்  அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்கு பதிவு செய்து மினி லாரியின் ஓட்டுநரான பொன்னன்குறிச்சி பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் செல்வராஜ் (35) என்பவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 1 யூனிட் எம்.சாண்ட் மற்றும் மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்