குலசேகரன்பட்டினம் கோவிலில் சாமி தரிசனத்துக்கு தடை
குலசேகரன்பட்டினம் கோவிலில் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
குலசேகரன்பட்டினம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் கோவிலில் வழக்கமான பூஜைகள் எளிமையாக நடந்தது. இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்றவாறு வழிபட்டு சென்றனர். சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்