சொத்து வரி பெயர் மாற்ற 236 பேர் விண்ணப்பம்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் புதிய சொத்துவரி, பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. இதை மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்தார். முகாம்களில் 236 பேர் விண்ணப்பித்தனர்.

Update: 2021-08-13 13:05 GMT
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் புதிய சொத்துவரி, பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. இதை மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்தார். முகாம்களில் 236 பேர் விண்ணப்பித்தனர்.
236 பேர் விண்ணப்பித்தனர்
திருப்பூர் மாநகராட்சி சார்பில் புதிய சொத்துவரி விதித்தல், பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நேற்று திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் செட்டிப்பாளையம் வரி வசூல் மையம், 2வது மண்டலத்தில் பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, 3வது மண்டலத்தில் கருமாரம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, 4-வது மண்டலத்தில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்றது.
இந்த மையங்களை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்தார். உதவி ஆணையாளர்கள் தங்கவேல்ராஜன் வருவாய், சுப்பிரமணியம், செல்வநாயகம், வாசுகுமார், கண்ணன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். நேற்று நடந்த முகாம்களில் காலியிட மனை வரிக்கு 14 பேரும், புதிய சொத்துவரிக்கு 54 பேரும், சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு 88 பேரும், குடிநீர் இணைப்புக்கு 75 பேரும், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு 3 பேரும், பாதாள சாக்கடை இணைப்புக்கு 2 பேரும் என மொத்தம் 236 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
16-ந் தேதி சிறப்பு முகாம்
இதுபோல் சிறப்பு முகாம் வருகிற 16ந் தேதி வார்டு எண்.1,5,6 ஆகிய பகுதிகளுக்கு அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியிலும், வார்டு எண்.20, 28 29,30 ஆகிய பகுதிகளுக்கு பிச்சம்பாளையம் புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், வார்டு எண்.34,35,38,39 ஆகிய பகுதிகளுக்கு நல்லூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், வார்டு எண்.49,56 ஆகிய பகுதிகளுக்கு கருவம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

-

மேலும் செய்திகள்