வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வந்த பரிசோதனை அறிக்கையில் காமராஜபுரம், டி.ஆர்.நகர், சேரன் நகர், கேபிசி நகர், உப்புபாளையம் கிழக்கு ஆகிய பகுதிகளை 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.