ஐதராபாத், புனேவில் இருந்து ஒரே நாளில் 9 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

ஐதராபாத், புனேவில் இருந்து ஒரே நாளில் 9 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன.

Update: 2021-08-13 08:06 GMT
ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரத்து 420 தடுப்பூசிகள் வந்து உள்ளன.

மத்திய தொகுப்பில் இருந்து ஆகஸ்டு மாதத்தில் தமிழகத்துக்கு 79 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன. அதில் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 65 பெட்டிகளில் 7 லட்சத்து 66 ஆயிரத்து 800 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன. அதேபோல் ஜதராபாத்தில் இருந்து 12 பெட்டிகளில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 360 ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்தன.

ஐதராபாத் மற்றும் புனேவில் இருந்து சென்னைக்கு ஒரே நாளில் 9 லட்சத்து 160 தடுப்பூசிகள் வந்தன. இவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை வந்த தடுப்பூசிகள், தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்