கோவையில் புதிதாக 249 பேருக்கு கொரோனா
கோவையில் நேற்று புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
கோவை
கோவையில் நேற்று புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
கொரோனா தொற்று
கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் சுகாதார துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று புதிதாக 249 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 114 ஆக அதிகரித்து உள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்து உள்ளது.
196 பேர் வீடு திரும்பினர்
கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 196 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 599 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2,308 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 491 பேர் சிகிச்சையில் உள்ளனர்.