கார் மோதி 2 பேர் சாவு

வாழப்பாடி அருகே கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-08-12 22:52 GMT
வாழப்பாடி, ஆக.13-
வாழப்பாடி அருகே கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2 பேர் சாவு
வாழப்பாடி அடுத்த ரெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளியப்பன் (வயது58). இவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பேளூர் வழியாக வாழப்பாடிக்கு சென்று கொண்டிருந்தார். வாழப்பாடி சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்ற போது அந்த வழியாக கார் திடீரென நிலைதடுமாறி காளியப்பன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காளியப்பன் தூக்கி வீசப்பட்டார்.
தொடர்ந்து அந்த கார் சாலையில் நடந்து சென்ற இன்னொருவர் மீது மோதியது. இதில் அந்த நபரும் காயம் அடைந்தார். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த இருவருக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
டிரைவர் கைது
விபத்து குறித்து வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்த 2 பேரில் ஒருவர் காளியப்பன் என்பது ஏற்கனவே தெரிந்து விட்டது. இன்னொருவர் பேளூர் மாதாகோவில் பகுதியைச்சேர்ந்தவர் ஆவார். இவர், அத்தனூர் பட்டி ஊராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் முதியவர் ஆறுமுகம் (75) என்பது தெரிய வந்தது.
இதற்கிடையே விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த தனசேகரன் (31). என்பவரை போலீசார் கைது செய்தனர். கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்