தலை நசுங்கி பெண் சாவு

ராஜாக்கமங்கலம் அருகே அரசு பஸ் மோதியதில் பெண் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-12 21:49 GMT
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே அரசு பஸ் மோதியதில் பெண் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
மீனவர் மனைவி
ராஜாக்கமங்கலத்தை அடுத்த ராஜாக்கமங்கலம்துறை பகுதியை சேர்ந்தவர் ஜோசப், மீனவர். இவருடைய மனைவி எமலிட் (வயது 64). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜோசப் இறந்து விட்டார். பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 
நேற்று அதிகாலை எமலிட் பொழிக்கரையில் உள்ள தனது தங்கையின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ராஜாக்கமங்கலம்துறை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார். 
தலைநசுங்கி சாவு
அப்போது, குளச்சலில் இருந்து சின்னமுட்டம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக எமலிட் மீது மோதியது. இதில், எமலிட் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதைகண்டு அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 பின்னர், இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
 மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான இரணியல் கோணம் பகுதியை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணவேணு (45) என்பவரை கைது சென்தனர்.

மேலும் செய்திகள்