கொட்டாம்பட்டி பகுதிகளில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சொக்கலிங்கபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது சொக்கலிங்கபுரம்-உதினிப்பட்டி பிரிவு சாலையில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி, டிராக்டரை போலீசார் மறித்தனர். தப்பி ஓடிய ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் மணல்மேட்டுப்பட்டியை சேர்ந்த ஜெகதீஷ்குமார் (வயது 32) என்பது தெரியவந்தது தப்பியோடிய டிப்பர் லாரி உரிமையாளர் வேட்டையன்பட்டியை சேர்ந்த சரவணன், டிராக்டர் டிரைவர் மணல்மேட்டுப்பட்டியை சேர்ந்த தமிழரசன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.மணல் கடத்திய 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.