மதுரை தெற்குவாசல் போலீசார் ரோந்து சென்ற போது தெற்குவெளிவீதியில் அரசு விதித்த தடையை மீறி வெளிமாநில லாட்டரி சீட்டு விற்று வருவதாக தெரியவந்தது. உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அங்கு சந்தேகப்படும்படியான ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் பாண்டிய வேளாளர் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 60) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.