விபத்தில் ஒருவர் பலி

நாகமலைபுதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.

Update: 2021-08-12 20:46 GMT
நாகமலைபுதுக்கோட்டை,

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ராஜா மகன் கோபி. இவரும், இவரது நண்பர் மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த பிரதீப்ராஜ் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் மேலக்கால் சென்றுவிட்டு காளவாசல் நோக்கி திரும்பி வந்தனர். பிரதீப்ராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தார். துவரிமான் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரதீப் ராஜ் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து கோபியின் தந்தை ராஜா கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்