தையல் தொழிலாளி தற்கொலை

தையல் தொழிலாளி தற்கொலை

Update: 2021-08-12 19:20 GMT
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் மணி (வயது 30). தையல் தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலி‌யால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு நாமக்கல்‌ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி‌ நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======

மேலும் செய்திகள்