லாட்டரி விற்றவர் கைது

வத்திராயிருப்பில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-12 18:49 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் வத்திராயிருப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஜார் பகுதியில் உள்ள டீக்கடை அருகே கூமாபட்டி மேலத்தெருவை சேர்ந்த பழனி (வயது 44) என்பவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் விசாரணை செய்ததில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும், ரூ.7 ஆயிரத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்