கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
திசையன்விளை அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல்புரத்தை சேர்ந்தவர் ஜெயசிங் (வயது 38), கொத்தனார். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஜெயசிங், ஆனைகுடியில் உள்ள ஒரு தோட்டத்தின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.