மது குடித்ததை மனைவி தட்டிக்கேட்டதால் மதுவில் விஷத்தை கலந்து குடித்து விவசாயி தற்கொலை
மதுவில் விஷத்தை கலந்து குடித்து விவசாயி தற்கொலை
வந்தவாசி
வந்தவாசிைய அடுத்த செம்பேடு கிராமம் செட்டியார் தெருவைச் சேர்ந்த கங்காதரனின் மகன் முருகன் (வயது 40), விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. வீட்டில் வளர்த்து வந்த மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில் மதுபானம் குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதை, அவரின் மனைவி தட்டிக்கேட்டுள்ளார். அதில் மனமுடைந்த முருகன் மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார்.
அவரை, அப்பகுதியினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.