திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். கலெக்டர் தகவல்
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் உள் விவகாரத்துறையால் நாட்டின் மிக உயர்ந்த இரண்டாவது விருதான பத்ம விருதுகள் 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்க உள்ளது. கல்வி, கலை, இலக்கியம், பத்திரிகை, கவிதை எழுதுதல், கல்வி சீர்திருத்தம். விளையாட்டு, மலையேறுதல், யோகா, சாகசம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, சித்தா மற்றும் இயற்கை மருத்துவம், சமூக தொண்டு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பொது விவகாரம், இந்திய கலாசாரம், மனித உரிமைக் காப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியந்தகு சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் பத்ம விபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தைசேர்ந்தவர்கள் இணையதளம் மூலமாக உரிய ஆதாரம் மற்றும் சான்றுகளுடன் 15.9.2021-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் செயல்பட்டு வரும் மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.