பள்ளி, கல்லூரிகளை திறக்கக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கவும், உரிய பாதுகாப்புடன் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஜனார்த்தனன், துணைச் செயலாளர் நிதிஷ்குமார், கார்த்திகாதேவி, வைரமணி, வைஷ்ணவி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.