சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2021-08-12 17:41 GMT
வந்தவாசி

பாலியல் வன்கொடுமை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மழவங்கரனை கிராமத்தை சேர்ந்தவர் அகமது ஜலீல் (வயது 66). காலையில் மளிகை வியாபாரமும், மாலையில் ஆடு மேய்க்கும் தொழிலும் செய்து வருகிறார். 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் மாடு மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு சிறுமி மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, அதேப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அகமது ஜலில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

இதை அதே கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் அலாவுதீன் (35) என்பவர் பார்த்துள்ளார். அவர் தான் பார்த்ததை வெளியில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி அவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால்  நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

முதியவர் கைது

இதுகுறித்து சிறுமியிடம், அவருடைய தாயார் விசாரித்துள்ளார். அப்போது சிறுமி நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அகமது ஜலீலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அலாவுதீனை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்