பொள்ளாச்சி
உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் மேற்பார்வையில் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இதற்கு வனச்சரகர் நவீன்குமார் தலைமை தாங்கினார். இதையொட்டி யானைகளை ஆற்றில் குளிப்பாட்டி பாகன்கள் அழைத்து வந்தனர். பின்னர் முகாமில் வீற்றிருக்கும் விநாயகரை யானைகள் துதிக்கையை தூக்கி வழிபட்டன. இதை தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது.
பின்னர் யானைகளுக்கு கரும்பு, வெல்லம், பொங்கல் வழங்கப் பட்டன. கோழிகமுத்தி முகாமில் நடந்த விழாவில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், பாகன்கள் பங்கேற்றனர். மேலும் இதில் 22 யானைகளும், வரகளியாறு முகாமில் 6 யானைகளும் கலந்துகொண்டன.