சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்

சத்திரப்பட்டி, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடந்தன.

Update: 2021-08-12 16:51 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டி அருகே உள்ள தேவத்தூர், மஞ்ச நாயக்கன்பட்டி, கொத்தயம் உள்ளிட்ட 7 ஊராட்சிகளை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. 

தேவத்தூர் வருவாய் ஆய்வாளர் பூங்கனி தலைமை தாங்கினார். ஒட்டன்சத்திரம் வேளாண்மை துணை அலுவலர் தங்கவேல் முன்னிலை வகித்தார். முகாமில் சிறு, குறு விவசாயிகள் 38 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் உதவி தோட்டக்கலை அலுவலர் மோகன், உதவி தொழில்நுட்ப மேலாளர் மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வேடசந்தூரில் நடந்த சிறப்பு முகாமுக்கு சப்-கலெக்டர்கள் (பயிற்சி) பிரியங்கா, விசுவநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார். தாசில்தார் மணிமொழி, வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்