பிளஸ்-2 மாணவியை மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பிளஸ்-2 மாணவியை மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2021-08-12 16:40 GMT
வில்லியனூர், ஆக.
வில்லியனூர் அருகே உள்ள ஆரியபாளையம் மடத்து வீதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 22). இவருக்கும், பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மாணவியின் வீட்டுக்குள் ஹரிகரன் புகுந்தார். கஞ்சா போதையில் இருந்த அவர், மாணவியை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதனால் பயந்து போன ஹரிகரன், அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்