ஆற்காட்டில் ஆசிரியையிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு
ஆசிரியையிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு
ஆற்காடு
ஆற்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-ஐ சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரின் மனைவி செல்வி (வயது 51). இவர், மாசாபேட்டை அண்ணாநகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சாப்பிட நடந்து சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பள்ளிக்கு வந்தார்.
வீட்டில் இருந்து சிறிது தூரம் நடந்து வரும்போது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 ேபர் தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு வந்தனர். அவர்கள் திடீெரன செல்வி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி, தாலி சரடு உள்பட 15 பவுன் நகைைய பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து. விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.