சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது

Update: 2021-08-12 15:18 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சாலைப்புதூர் நல்லூரைச் சேர்ந்தவர் சுயம்பு. இவருைடய மகன் முத்துலிங்கம் (வயது 32). கூலி தொழிலாளியான இவர் தனது நண்பரான புத்தன்தருவையைச் சேர்ந்த தங்கராஜிடன் தட்டார்மடம் அருகே நயினார்புரத்தில் நடந்த கோவில் கொடை விழாவில் கிடா வெட்ட சென்றிருந்தார்.
அப்போது முத்துலிங்கம் தனது மோட்டார் சைக்கிளை அதே பகுதியில் உள்ள உதயசிங் என்பவரது வீட்டில் நிறுத்தி சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது ேமாட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் ரூ.50 ஆயிரம் வைத்திருந்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நவீன்குமார், முத்துலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான நவீன்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்