உடன்குடியில் அதிகாரியின் அறிவுரையை ஏற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள்

உடன்குடியில் அதிகாரியின் அறிவுரையை ஏற்று பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்

Update: 2021-08-12 12:48 GMT
உடன்குடி:
உடன்குடி வாரச்சந்தை அருகே கணபதிபுரம் பகுதியில் 30-க்கும் மேற்பட்டகுடும்பங்களைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் பல முறை சென்று அறிவுரை கூறியும் இந்த மக்கள் பயத்தினால் ஊசி போட முன்வரவில்லை. இந்த தகவல் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூக்கு தெரிந்தது. 
இதை தொடர்ந்து அவரது உத்திரவின்படி திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா கணபதிபுரத்திற்கு நேரில் சென்று, அந்த மக்களை அழைத்து பேசினார். அப்போது,  தடுப்பூசி போடுவதினால் எந்த பாதிப்பும் இல்லை, நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அனைவரும் கண்டிப்பாக ஊசி போட வேண்டும்,  அப்போது தான் உங்கள் சமுதாய மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும் என விளக்கம் கொடுத்தார். அதன் பின்பு கணபதிபுரம் பகுதி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து இந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என உதவி கலெக்டர் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சிக்கு உடன்குடி வட்டார மருத்துவ அலுவலர் அனி பிரிமின் முன்னிலை வகித்தார். இதில் உடன்குடி வருவாய் ஆய்வாளர் சொக்கலிங்கம், சுகாதார ஆய்வாளார் சேதுபதி உட்பட மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்