திருவாரூரில் ‘டி.கே.எம்.9’ ரக நெல்லை அரசு கொள்முதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
‘டி.கே.எம்.9’ ரக நெல்லை அரசு கொள்முதல் செய்யக்கோரி திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:-
‘டி.கே.எம்.9’ ரக நெல்லை அரசு கொள்முதல் செய்யக்கோரி திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘டி.கே.எம்.9’ ரக நெல்
தமிழக வேளாண்துறை கண்டுபிடிப்பான ‘டி.கே.எம்.9’ ரக நெல் விதை மூலம் கோடை கால சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்த நெல்லை விற்க முடியாத நிலை இருந்து வருகிறது. அரசு நெல் நெல் கொள்முதல் நிலையங்களில் ‘டி.கே.எம்.9’ ரக நெல்லை வாங்க மறுக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக அரசு ‘டி.கே.எம்.9’ ரக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் ‘டி.கே.எம்.9’ ரக நெல்லை கொள்முதல் செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் முருகேசன், நிர்வாகிகள் குமரேசன், வடுகநாதன், பாலகுமாரன், சத்தியமூர்த்தி, மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.