மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-08-12 10:14 GMT
செங்கல்பட்டு, 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரெயில் பெட்டிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். புதுச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியம் வழங்க வேண்டும். ரெயில் நிலையங்களில் மின்தூக்கி நகரும் படிக்கட்டுகளை இயக்க வேண்டும். நடைமேடை கட்டணம் ரூ.50 என்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி செங்கல்பட்டு ரெயில் நிலைய வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்க மாநில துணைத்தலைவர் பாரதி அண்ணா தலைமை தாங்கினார்.

மேலும் செய்திகள்