பொன்னேரி அருகே மினி லாரியில் மணல் கடத்தல்; வாலிபர் கைது

பொன்னேரி அருகே மினி லாரியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-12 09:18 GMT
பொன்னேரி,

பொன்னேரி அடுத்த தேவராஞ்சேரி கிராமத்தில் பொன்னேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேவராஞ்சேரி கிராமத்தில் உள்ள சுடுகாடு பகுதியில் மினிலாரி ஒன்றில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த மர்மநபர்கள் மணலை அவசரமாக கீழே கொட்டி விட்டு தப்பி ஓட முயன்றனர். 

இதில் மினிலாரியை ஓட்டி வந்து மணல் திருட்டில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தை சார்ந்த அஜித்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மினிலாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து டிரைவர் அஜித்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்