தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு

தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-12 08:36 GMT
தாம்பரம், 

சென்னையை அடுத்த குரோம்பேட்டை கோதண்டன் நகரைச் சேர்ந்தவர் முத்துலிங்கம்(வயது 56). இவர், பம்மலை அடுத்த நாகல்கேணி, சற்குணம் சாலையில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார்.

நேற்று மாலை தோல் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் வெளியேறும் பாதையில் உள்ள தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி முத்துலிங்கம் மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு முத்துலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்