மொரப்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் - கொலையா போலீசார் விசாரணை

மொரப்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-12 03:18 GMT
மொரப்பூர்,

மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் ரெயில் பாதையில் சிங்காரத்தோப்பு முனீஸ்வரன் கோவில் அருகில் ரெயில் தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவன் சிவசக்தி வேலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்