தனிப்பிரிவு போலீசார் 5 பேர் பணியிட மாற்றம்

தனிப்பிரிவு போலீசார் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2021-08-12 01:13 GMT
தனிப்பிரிவு போலீசார் 5 பேர் பணியிட மாற்றம்
திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, முசிறி, லால்குடி, ஜீயபுரம் மற்றும் திருவெறும்பூர் ஆகிய 5 போலீஸ் சப்-டிவிசன்களின் எல்லைக்குட்பட்ட 30 போலீஸ் நிலையங்களின் செயல்பாடுகள், வழக்குப்பதிவு குறித்த விவரங்களை முன்கூட்டியே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவிக்க ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தனிப்பிரிவு போலீசார் உள்ளனர். அவர்களில் மாவட்டம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த நிலையில் 5 பேரை, சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, தனிப்பிரிவு போலீசார் வையம்பட்டி பழனிவேல், முசிறி ராஜா, புலிவலம் பாலு, தொட்டியம் வினோத், உப்பிலியபுரம் தியானேஸ்வரன் ஆகிய 5 பேரும் சட்டம்-ஒழுங்கு பிரிவு மற்றும் இதர போலீஸ் பிரிவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுபோல பெட்டவாய்த்தலை, சமயபுரம், சிறுகனூர், திருவெறும்பூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு புதிய தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்