மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 30). இவரிடம், குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ராஜவினு (30), அவருடைய மனைவி சுனிதா ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதனை நம்பிய ஜெயகுமார் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது அதனை கொடுக்க மறுத்து உள்ளனர். இதுகுறித்து ஜெயக்குமார், அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ராஜவினு அவருடைய மனைவி சுனிதா உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.