மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார்
ஆவூர்
விராலிமலை அருகே உள்ள எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 44). இவர் தனது தந்தை விவசாயியான ஜம்புலிங்கத்தை(70) தனது மோட்டார் சைக்கிளில் மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து அன்று மாலை கீரனூர் வழியாக விராலிமலை சாலையில் தந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சித்தாம்பூர் விலக்கு ரோட்டிருக்கும் ஆம்பூர்பட்டி நால் ரோட்டிற்கும் இடையே வந்த போது எதிரே மண்டையூர் நத்தக்காடு கிராமத்தை சேர்ந்த கந்தன் (50) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜம்புலிங்கம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.