குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்;
புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மேட்டுத்தெரு மகராஜாபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் அரசு அருங்காட்சியம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் தரப்பில் சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.