கெட்டுப்போன 150 கிலோ மீன்கள் பறிமுதல்

சாத்தூரில் கெட்டுப்போன 150 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-08-11 20:01 GMT
சாத்தூர்,
சாத்தூரில் கெட்டுப்போன 150 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
மீன் கடைகளில் ஆய்வு 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் மீன்துறை உதவி இயக்குனர் மற்றும் உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் அறிவுறுத்தலின்படி சாத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன்குமார் தலைமையில் மீன்வள ஆய்வாளர் அபுதாஹீர் மற்றும் மீன் வளம் மேற்பார்வையாளர் ராம கவுண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெங்கடாசலபுரம், பைபாஸ் ரோடு, தாயில்பட்டி ரோடு, மெயின் ரோடு, ெரயில்வே பீடர் ரோடு ஆகிய பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
150 கிலோ மீன்கள் பறிமுதல் 
 அப்போது மீன் மற்றும் இறைச்சி கடைகளில் காலாவதியான, தேதிகள் குறிப்பிடப்படாத மற்றும் கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. 
இதையடுத்து கெட்டுப்போன 150 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அழித்தனர். இவ்வாறு கெட்டுப்போன, காலாவதியான மீன் மற்றும் இறைச்சிகளை தொடர்ந்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்