சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சடைக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 42). லாரி டிரைவரான இவர், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.