விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இருக்கன்துறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
வடக்கன்குளம்:
கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் புதிதாக 2 கல் குவாரிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் எனவும், எனவே கல் குவாரிகளை தடை செய்யுமாறு வலியுறுத்தியும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.