தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் தாண்டவன். இவரது மனைவி ரெத்தினம் (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தாண்டவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ரெத்தினம் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரெத்தினத்தின் தந்தை பெரியசாமி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.