மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி என்ஜினீயர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி என்ஜினீயர் பலியானார்.

Update: 2021-08-11 18:34 GMT
வில்லியனூர், ஆக.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (23). மெக்கானிக்கல் என்ஜினீயர் படித்துவிட்டு வேலை தேடி வந்தார். நேற்று காலை ஏம்பலம் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏம்பலம்- கரிக்கலாம்பாக்கம் சாலையில் தனிக்குப்பம் பகுதியில் மதியம் 2.30 மணியளவில் ஸ்ரீதரன் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிரே கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் இருந்து வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஸ்ரீதரன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்ரீதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்