ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட செம்மரை உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு வனவிலங்குகள் நடமாட்டமும் காணப்படுகிறது. எனினும் அந்த கிராமங்களில் வன உரிமை சட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிலம் குன்னூர் வனத்துறைக்கு சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது. மாறாக மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதனால் மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிகளை அழைத்து வந்து மீண்டும் ஆய்வு பணி தொடங்கும் என்று தெரிவித்துவிட்டு குன்னூர் அதிகாரிகள் திரும்பினர். எனினும் பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆதிவாசி மக்கள் தொடர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.