வெள்ளத்தால் உடைந்த பாலம் மீண்டும் கட்டி தரப்படுமா?

கூடலூரில் வெள்ளத்தால் உடைந்த பாலம் மீண்டும் கட்டி தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2021-08-11 18:08 GMT
கூடலூர்,

கூடலூரில் வெள்ளத்தால் உடைந்த பாலம் மீண்டும் கட்டி தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பாலம் இடிந்தது

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் பருவமழை தீவிரமாக பெய்வது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையில் கூடலூர் கோல்டன் அவென்யூ, துப்புக்குட்டிபேட்டை உள்பட பல்வேறு இடங்களில் சிமெண்டு பாலங்கள் உடைந்து விழுந்தன. அதில் கோல்டன் அவென்யூ குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பாலம் மட்டும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இங்கு ஆற்று வாய்க்காலுக்கு குறுக்கே அந்த பாலம் கட்டப்பட்டு இருந்தது.

வெள்ளத்தால் பாலம் உடைந்ததால், அந்த வாய்க்காலை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தனியார் நிலம் வழியாக சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த பாலத்தை மீண்டும் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

மீண்டும் கட்ட வேண்டும்

இதுகுறித்து கோல்டன் அவென்யூ குடியிருப்பு பொதுமக்கள் கூறியதாவது:-  எங்கள் பகுதியில் ஆற்றுவாய்க்காலை கடக்க சிமெண்டு பாலம் கட்டி தரப்பட்டது. அந்த பாலம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் மழை வெள்ளத்தால் அந்த பாலம் உடைந்துவிழுந்த பிறகு அதனை சீரமைக்க யாரும் முன்வரவில்லை. அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தாலும், பணியை உடனே தொடங்குவதாக கூறுகின்றனர். 

ஆனால் அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே மழையால் உடைந்த பாலத்தை மீண்டும் கட்டி தர இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்