கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-08-11 17:46 GMT
ஊட்டி,

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்க நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் உள்ள துணை பதிவாளர் சங்கங்களின் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் செல்வம் உள்பட சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, தமிழகத்தில் துணைப்பதிவாளர் பதவி உயர்வு பட்டியல் தயார் செய்து 5 மாதங்களுக்கு மேலாகியும் வெளியிடப்படவில்லை. அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

சென்னை திருவல்லிக்கேணியில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை புகார் எழுந்து வருகிறது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.

மேலும் செய்திகள்