பா.ம.க. உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

நெமிலியில் பா.ம.க. உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.;

Update: 2021-08-11 17:46 GMT
நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்கத்தின் சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீட்டை கண்டித்தும், அதற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

பா.ம.க. மாநில இளைஞரணி செயலாளர் தீனதயாளன் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் திருமால், மாவட்ட செயலாளர் ராமன், மாவட்ட தலைவர் சிவகாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநில மாணவரணி செயலாளர் பிரபு வரவேற்றார். சமூக நீதிப்பேரவை மாநிலச் செயலாளர் வக்கீல் சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 86 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டது. 

தி.மு.க. ஆட்சி பதவியேற்று 100 நாட்கள் கூட முடிவடையாத சூழ்நிலையில் 29 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

எனவே ஏற்கனவே செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறந்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டுமென  கேட்டுக்கொண்டனர். 

மேலும் ஆர்ப்பாட்டத்தில் நெல்லை தரையில்  கொட்டியும், முளைத்தநெல்லை கையில் ஏந்தியும் கலந்துகொண்டனர்.

 மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன், மாநில சமூக நீதிப் பேரவை சு. சக்கரவர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்